
19 ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறுமுனையிலும் வை.இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும் படி கிருபாசனத்தோடு இணை.20 பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும்.அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடவேண்டும்.அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்கவேண்டும்.21 நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்தப் பெட்டிக்குள் வை.பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து.22 நான் உன்னைச் சந்திக்கும்போது,உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன்.


மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடத்தின் கீழே மிகப்பெரிய நிலப்பிளவை காணமுடிகிறது.இது இயேசு கிறிஸ்து இறக்கும்பொழுது ஏற்ப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தை உறுதிசெய்கிறது.இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கடவுளின் உடன்படிக்கை பெட்டி வரை நீள்கிறது.மேலும் கடவுளின் உடன்படிக்கை பெட்டியில் இயேசு கிறிஸ்துவின் இரத்த துளிகளை காணமுடிகிறது. இந்த இரத்தம் 20 அடிக்கு மேலே இருந்து நிலநடுக்க பிளவின் வழியாக உடன்படிக்கை பெட்டியை அடைந்துள்ளது.இதன் அர்த்தம் என்ன? இது எதை தெளிவுப்படுத்துகிறது?

பரிசுத்த கூடாரம் அமைப்பு மற்றும் கல்லறைத் தோட்டம்
இதற்க்கு சில பழைய பைபில் நிகழ்வுகளை நினைவுகூற விரும்புகிறேன்.ஆதியாகமத்தில் அபிரகாம் தன் அன்புக்குறிய சொந்த மகனையே கடவுளுக்காக பலியிட துணிந்தது அவர் கடவுளின் மீது வைத்திருந்த அளவற்ற அன்பை காட்டுகின்றது. அதே போல கடவுள் தன் அன்பு மகனை மக்களின் பாவபரிகாரத்திற்காக பலி கொடுத்தார்.இது கடவுள் நம் மீது வைத்துள்ள அளவற்ற அன்பை குறிக்கிறது.ஏன் கடவுள் நமக்காக தன்னுடைய மகனையே பலி கொடுக்க நினைத்தார்? ஆதியாகமத்தில் (யாத் 29:15)பாவ பரிகாரத்திற்காக ஆரோக்கியமான் கொழுத்த ஆட்டுக்குட்டியை பலியிட்டு அதன் இரத்தத்தை பலிபீடத்தில் தெளித்தனர்.இது கடவுளால் அறிவுறுத்தப்பட்ட ஒன்று. ஆகவே இந்த பாவபரிகாரம் தற்பொழுது செய்கின்ற பாவங்களுக்காக மட்டுமே.நம் ஆதி பெற்றோர்களால் ஏற்ப்பட்ட ஜென்மபாவத்திற்கு சாதரன ஆட்டுகுட்டியையோ அல்லது வேறு விலங்குகளையோ பலியிட்டு ஈடு செய்ய இயலாது.ஏனெனில் மனிதன் படைப்புகளில் எல்லாம் உயர்வானவன்,ஆக அவனுடைய இந்த பாவ பரிகாரத்திற்கு ஒரு மனிதனை பலியிடுவதை தவிர வேறு வழியில்லை.அப்படி பலியிடக்கூடிய மனிதன் நல்ல ஆரோக்கியமான அதே சமயம் எந்த பாவமும் செய்யாத மேலும் ஜென்மபாவம் இல்லாதவனாக இருக்க வேண்டும்.அப்படி ஒரு மனிதனை கண்டிப்பாக பார்க்க இயலாது.இதற்கு வழிதான் என்ன?



பரிசுத்த கூடாரம் அமைப்பு வரைப்படம்



Resting Place of jesus
மேலே உள்ளவை என் அறிவிற்கு எட்டிய அளவிற்கு எழுத முயற்சி செய்துள்ளேன்.இதில் தவறுகள் இருப்பின் சுட்டி காட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு.அதை பதிவு செய்ய மிகுந்த ஆவலாக உள்ளேன்.பிற்காலங்களில் இதனிடையே பதிவுகளை கோர்க்கவும் ஆவலாக உள்ளேன்.
thanks for ur contribute
S.P.Uma Sankar
D.Deivamurugan
mikka nanri...for translation in tamil...
ReplyDelete